தனியுரிமைக் கொள்கை
நாங்கள் சேகரிக்கும் தகவல்
எதுவும் இல்லை. செயலியில் கணக்குப் பதிவு (login) இல்லை. பிறந்த தேதி, நேரம், இடம், பெயர் போன்ற நீங்கள் உள்ளிடும் தகவல்கள் உங்கள் சாதனத்தில் மட்டுமே சேமிக்கப்படும்; எங்கள் சேவையகத்துக்கோ மூன்றாம் தரப்புக்கோ அனுப்பப்படாது.
கணிப்பு
அனைத்துக் கணிப்புகளும் செயலிக்குள்ளேயே, சாதனத்தில் நடைபெறுகின்றன. ஊர்த் தேடலும் சாதனத்திலுள்ள தரவுத்தளத்தையே பயன்படுத்தும்.
அனுமதிகள்
Google Play பதிப்பு இணைய அனுமதி கோருவதில்லை. அறிக்கைகளைச் சேமிக்க/பகிர நீங்கள் தேர்ந்தெடுத்தால் மட்டுமே சாதனத்தின் பகிர்வு வசதி பயன்படும்.
கட்டணம்
₹999 ஒருமுறைக் கட்டணம் நீங்கள் செயலியைப் பெறும் கடையால் (Google Play அல்லது Indus Appstore) செயலாக்கப்படும். உங்கள் அட்டை/UPI விவரங்களை நாங்கள் பெறவோ சேமிக்கவோ மாட்டோம்.
விளம்பரம் & பகுப்பாய்வு
விளம்பரங்கள் இல்லை. பயனர் நடத்தையைப் பின்தொடரும் கருவிகள் இல்லை.
தகவல் நீக்கம்
செயலியை நீக்கினால் (uninstall) சாதனத்திலுள்ள சேமித்த ஜாதகங்கள் அனைத்தும் நீங்கும். செயலிக்குள்ளும் ஒவ்வொரு பதிவையும் நீக்கலாம்.
குழந்தைகள்
இச்செயலி 13 வயதுக்குட்பட்டோரை இலக்காகக் கொண்டதல்ல.
மாற்றங்கள்
இக்கொள்கை மாறினால் இப்பக்கத்தில் புதிய தேதியுடன் வெளியிடுவோம்.
தொடர்புக்கு
Krishnalaya Astro Centre, வேலூர் · admin@krishnalaya.cloud